tamilnadu

img

மருத்துவமனை படுக்கை கிடைக்காததால் 13 மணி நேரம் அலைந்து ஆம்புலன்ஸிலேயே இறந்த கர்ப்பிணிப் பெண்...

லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தில் மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் ஒவ்வொரு மருத்துவமனையாக 13 மணி நேரம் அலைந்து,  ஆம்புலன்ஸிலேயே  கர்ப்பிணிப்பெண் உயிரிழந்தார்.உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா-காசியாபாத் எல்லையில் கோடா காலனியைச் சேர்ந்தவர் விஜேந்தர் சிங். இவர் மனைவி நீலம், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். தில்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அவ்வப்போது மருத்துவஆலோசனை பெற்று வந்தார்.

இந்த நிலையில் ஜூன் 5 அன்று இரவு நீலத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புல ன்சில் வழக்கமாக மருத்துவ ஆலோ சனைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு கணவர் விஜேந்தர் சிங் மனைவியை அழைத்துச் சென்றார். ஆனால், அங்கு படுக்கை இல்லை எனக்கூறி அனுமதிக்க மறுத்து விட்டனர். ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்த நிலையில், 13 மணி நேரத்தில் ஆம்புலன்ஸிலேயே நீலம், பிரசவ வேதனையில் துடிதுடித்து உயிரிழந்தார்.இதுகுறித்து விஜேந்தர் சிங் கூறுகையில், நொய்டா, கவுதம் புத்தா நகர், வைஷாலி, காசியாபாத் என ஒவ்வொரு மருத்துவ மனையாக அலைந்தோம். இவற்றில் அரசு மருத்துவமனை, தனியார்மருத்துவமனை என எட்டு மருத்துவ மனைகள் அடங்கும். ஆனால், படுக்கை வசதி இல்லை என்று எல்லா மருத்துவமனைகளிலும் திருப்பி அனுப்பினர்.

இறுதியாக, நொய்டாவில் உள்ள அரசு மருத்துவமனையின் வாசலில் ஆம்புலன்ஸிலேயே என் மனைவிஇறந்து விட்டார் என்று தெரிவித் தார். இவரது பேட்டி, சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கவுதம புத்தா நகர் மாவட்டஆட்சியர்  சுஹாஸ், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். உரிய  நேரத்தில்சிகிச்சை கிடைக்காததால்,  கவுதம்புத்தா நகர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும். கடந்தமாதம் 25ஆம் தேதி, ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்தும் சிகிச்சை கிடைக்காததால் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

;